இதுவரை 4000 பாடல்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் கலா மாஸ்டர். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா பெங்காலி, இங்கிலிஷ், இட்டாலியன், ஜப்பனிஸ் என பல மொழி படங்களுக்கு கோரியோகிராஃப் செய்துள்ளார்.
தேசியவிருது முதல் தமிழக அரசின் விருது வரை ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் கலா மாஸ்டர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்
கலா மாஸ்டர் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் கலா மாஸ்டர்.அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் கலா மாஸ்டர்.
இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளாமேலும், 'என்னுடைய முதல் பிரச்சார பயணம் நான் பிறந்த மண் ஈரோட்டில் இருந்து இன்று தொடங்கினேன்! என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment