புதுவருட கொண்டாடத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை -அஜித் ரோஹண - Yarl Voice புதுவருட கொண்டாடத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை -அஜித் ரோஹண - Yarl Voice

புதுவருட கொண்டாடத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை -அஜித் ரோஹணபுது வருட கொண்டாடத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், புத்தாண்டு காலம் குறித்து தற்போது கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பழக்கவழக்கங்களின்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்காலத் தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post