சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவலை பரப்பிவிட்டு இலங்கையில் மறைந்திருக்கலாம் - அமைச்சர் சரத் வீரசேகர - Yarl Voice சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவலை பரப்பிவிட்டு இலங்கையில் மறைந்திருக்கலாம் - அமைச்சர் சரத் வீரசேகர - Yarl Voice

சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவலை பரப்பிவிட்டு இலங்கையில் மறைந்திருக்கலாம் - அமைச்சர் சரத் வீரசேகரஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாரா- புலத்சினி ராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டாரா என்பதை உறுதி செய்வதற்காக புதைக்கபட்ட உடல்களை தோண்டவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டியில் தாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி என கருதப்படும் சாரா எங்கிருக்கின்றார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 11 பேரில் பத்துபேரின் உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளதால் சாரா உயிரிழந்திருக்கலாம் என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட மரபணுமாதிரிகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதற்காக உடல்களை தோண்டி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டமுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாரா தான் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுவிட்டேன் என்ற தகவலை பரப்பிவிட்டு எங்காவது மறைந்திருக்கலாம் அல்லது அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதி செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post