ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றி பெறாது - ஜனாதிபதி - Yarl Voice ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றி பெறாது - ஜனாதிபதி - Yarl Voice

ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றி பெறாது - ஜனாதிபதிராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்களை உருவாக்குவதற்கு பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள  போதிலும் அந்த குடும்பத்தை அரசியல் மூலம் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலுமே மிகச்சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவரது அரசியல் பரிச்சயம் முதிர்ச்சி அறிவு தலைமைத்துவம் போன்றறை எவருடனும் ஒப்பிடமுடியாதவை என நான் கருதுகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் கட்சிக்கு தலைமை தாங்கும்போது நான் நாட்டிற்கு தலைமை தாங்குவது  எனக்கு பெரும் ஆறுதலாகயிருககும் என நான் கருதுகின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எங்களது வெற்றிக்கான பயணத்தில் முக்;கிய காரணி மகிந்த ராஜபக்சவே என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியொன்றை உருவாக்கி வெற்றியொன்றை சாத்தியமாக்கியவர் பசில் ராஜபக்சவே என்பதை எந்த வித விவாதங்களுமின்றி நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தலைவர்களுடன் அரசாங்கமொன்றை தொடர்வதே எனக்கு சாதகமான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post