வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரன் ஆலய தேர்த்திருவிழ் வெகு சிறப்பாக நடைபெற்றது - Yarl Voice வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரன் ஆலய தேர்த்திருவிழ் வெகு சிறப்பாக நடைபெற்றது - Yarl Voice

வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரன் ஆலய தேர்த்திருவிழ் வெகு சிறப்பாக நடைபெற்றதுவரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வர சுவாமியின்  தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

இன்று காலை அபிசேக ஆராதனைகளும் வசந்த மண்டப பூசைகளும் நடைபெற்று
விநாயகர், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக  எழுந்தருள  நகுலேஸ்வரப்பெருமான்  எழுந்தருளி உள்வீதியில் வலம் வந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமணர்களின் மந்திர உஷ்டானங்கங்கள் ஒலிக்க முதல் தேரிலே விநாயகப்பெருமானும் இரண்டாவது தேரிலே  நகுலேஸ்வரப்பெருமான் சமேத நகுலாம்பிகையும், மூன்றாவது தேரிலே முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இணைந்து தேரேறி வெளி வீதி உலா வந்தனர்.

பக்தர்கள் தேரின் பின்னே பஜனைபாடி மங்கள வாத்தியங்கள் முழங்க தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 26 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில்  நேற்று இரவு திருவிழாவாக சப்பறத் திருவிழாவும் 14 நாளாகிய சிவராத்திரி  தினமாகிய இன்று காலை  தேர்த் திருவிழாவும் மாலை சிவராத்திரி விசேட பூசைகளும் நடைபெற்று 15 ஆம் நாளாகிய நாளை கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில்  நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இனிதே  நிறைவடையவுள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post