ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்) வன்னி தேர்தல் மாவட்டத்தின் (மன்னார், வவுனியா, முல்லைத்தீவு) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
அதற்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்,  முன்னாள் ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று (மார்ச் 11) முற்பகல்  பெற்றுக் கொண்டார்.
 

Post a Comment