ஏப்ரல் 14 முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு - Yarl Voice ஏப்ரல் 14 முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு - Yarl Voice

ஏப்ரல் 14 முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

 தினசரி தற்போது 2 நாட்களாக 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது

எனவே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இன்னும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே 4 நாட்கள் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. 

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின் படி , தகுதியான அனைவருக்கும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த வைப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post