மியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் - அரசாங்கம் வேண்டுகோள் - Yarl Voice மியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் - அரசாங்கம் வேண்டுகோள் - Yarl Voice

மியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் - அரசாங்கம் வேண்டுகோள்

 


மியன்மார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தமைக்காக கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான மியன்மார் தூதுவரை 9 ம் திகதி அழைத்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்களிற்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கான இலங்கை தூதுவரும் இந்த விவகாரத்தை கையாள்கின்றார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 12 ம் திகதி மியன்மார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களிற்கு மியன்மார் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையைய வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post