தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை - Yarl Voice தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை - Yarl Voice

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நினைவுப் பேருரை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைத்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியிருந்தார்.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post