வலி வடக்கில் விடுவித்த நிலத்தை மீண்டும் அபகரிக்கும் படையினர் - Yarl Voice வலி வடக்கில் விடுவித்த நிலத்தை மீண்டும் அபகரிக்கும் படையினர் - Yarl Voice

வலி வடக்கில் விடுவித்த நிலத்தை மீண்டும் அபகரிக்கும் படையினர்
காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர். பிரிவில் 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவம் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.

பருத்தித்துறை பொன்னாலை வீதியில் காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் பிடியில் 27 ஆண்டுகள் இருந்து  2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலமே இவ்வாறு  இரவோடு இரவாக இராணுவம் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.

இவ்வாறு அறிவித்தல் நாட்டியுள்ள நிலமானது இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியாகும் இப் பகுதி விடுவிக்கப்பட்ட பின்பு காணி் உரிமையாளர்கள் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதோடு இதன் அருகே காணப்பட்ட வீதியினை பிரதேச சபையும் புதிதாக அமைத்து வழங்கியிருந்தது. 

இந்த நிலையிலேயே குறித்த நிலம் தற்போது இராணுவம் மீண்டும் கையகப்படுத்த முனைவதாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post