அரசின் 5 ஆயிரம் ரூபா விநியோகம் வடக்கில் இன்னமும் 45 ஆயிரம் குடும்பங்களிற்கு வழங்கப்படவில்லை - Yarl Voice அரசின் 5 ஆயிரம் ரூபா விநியோகம் வடக்கில் இன்னமும் 45 ஆயிரம் குடும்பங்களிற்கு வழங்கப்படவில்லை - Yarl Voice

அரசின் 5 ஆயிரம் ரூபா விநியோகம் வடக்கில் இன்னமும் 45 ஆயிரம் குடும்பங்களிற்கு வழங்கப்படவில்லைகொவிட் 19காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்  புதுவருடம் கொண்டாட்டத்தில் ஈடுபடும்  வகையில் வழங்குவதாக அரசு அறிவித்த  5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வடக்கு மாகாணத்தில் மட்டும்  இன்று வரை 46 ஆயிரத்து 515 குடும்பங்களிற்கு  கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்படிகின்றது.

இந்த வகையில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம்  மாவட்டத்தில்  ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 178  குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்ட நிலையில்  நேற்று வரையில் ஒரு லட்சத்து 13  ஆயிரத்து 386  குடும்பங்களிற்கு மட்டும்  விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 34 ஆயிரத்து 792  குடும்பங்களிற்கு  வழங்க வேண்டியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில்  35 ஆயிரத்து 58 குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா அனுமதிக்கப்பட்டது. இங்கே  நேற்று வரையில் 31 ஆயிரத்து 544 குடும்பங்களிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் 3ஆயிரத்து 514 குடும்பங்களிற்கு வழங்க வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் 42 ஆயிரத்து 321 குடும்பங்களிற்கு  அனுமதிக்கப்பட்டது. இருந்தபோதும்  நேற்று வரையில் 
37 ஆயிரம்  குடும்பங்களிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் 5 ஆயிரத்து 321  குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்திலே 33  ஆயிரத்து 163 குடும்பங்களிற்கு  அனுமதிக்கப்பட்டது. இதில்  நேற்று வரையில் 30  ஆயிரத்து 395  குடும்பங்களிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மேலும்   2 ஆயிரத்து 768  குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  23  ஆயிரத்து 907  குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா அனுமதிக்கப்பட்ட நிலையில்  நேற்று வரையில் 23  ஆயிரத்து 788 குடும்பங்களிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 119  குடும்பங்களிற்கு மட்டுமே வழங்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 627 குடும்பங்களிற்கு அனுமதிக்கப்பட்டதில் 2 லட்சத்து 36  ஆயிரத்து 113  குடும்பங்களிற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post