மியன்மாரில் படையினரின் தாக்குதலில் 80க்கும் அதிகமானவர்கள் பலி - Yarl Voice மியன்மாரில் படையினரின் தாக்குதலில் 80க்கும் அதிகமானவர்கள் பலி - Yarl Voice

மியன்மாரில் படையினரின் தாக்குதலில் 80க்கும் அதிகமானவர்கள் பலி
மியன்மாரின் பாகொ நகரில் இராணுவத்தினரின் மேற்கொண்ட தாக்குதலில் 80க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட பலரின் உடல்களை இராணுவத்தினர் எடுத்துச்் சென்றுள்ளதால் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதநிலை காணப்படுவதாக அந்த நகரிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத்தினர் அசையும் பொருள் எதன் மீதும் தாக்குதலை மேற்கொள்ளும் பாரிய ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் அந்த நகரிலிருந்து தப்பி வெளியேறியவர்கள் மூலம் உண்மை தெரியவந்துள்ளதாகவும் மியன்மார் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என அரசியல் கைதிகளிற்கான சங்கம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த ஒருவர் இது இனப்படுகொலை போல காணப்படுகின்றது நடமாடும் எவரையும் அவர்கள் சுட்டுக்கொல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post