இந்த வருடம் மாகாணசபைகள் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை- விமல் - Yarl Voice இந்த வருடம் மாகாணசபைகள் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை- விமல் - Yarl Voice

இந்த வருடம் மாகாணசபைகள் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை- விமல்மாகாணசபைகள் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும் அதற்கான வாய்ப்பு இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை நடத்துவது என்றால் புதிய தேர்தல் முறைக்கு நாடாளுமன்றம் அனுமதியை வழங்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமை குறித்த நகல் ஆவணமொன்றை உருவாக்க வேண்டும்,பொதுமக்களின் கருத்துக்களை கோரவேண்டும் பின்னர் அதனை சட்டமா அதிபர் திணைக்களம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை பின்பற்றவேண்டியுள்ளதால் எங்களால் இந்த வருடம் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என நான் கருதவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post