மணிவண்ணனின் கைது பாசிச ஆட்சியின் வெளிப்பாடு - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice மணிவண்ணனின் கைது பாசிச ஆட்சியின் வெளிப்பாடு - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice

மணிவண்ணனின் கைது பாசிச ஆட்சியின் வெளிப்பாடு - பாராளுமன்றில் கஜேந்திரகுமார்யாழ் மாநகர மேயர் பயங்கவாதத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
யாழ் மாநகர மேயர் ,தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையை மீளுருவாக்கம் செய்ய முனைந்தார் என்று அரசாங்கம் உருவாக்க முயலும் பொய் பிம்பம் உண்மையில் அபத்தமானது .
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு உட்பட பலபகுதிகளில் மாநகரசபைகளினால் வாகனத்தரிப்பு கட்டண அறவிடல் உட்பட பல விடயங்களுக்காக பல பிரிவுகள் இயங்குகின்றன.
ஆனால் மாநகர சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினர் இள நீல மற்றும் கடும் நீல நிற ஆடை அணிந்தார்கள் என்பதற்காக , அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முனைந்தார்கள் என கூறுவது முற்றிலும் அபத்தமானது .
உண்மையில் நான் யாழ் மாநகர மேயருடைய விசுவாசி அல்லன், உண்மையில். அவர் எமது அமைப்பின் முன்னாள் அங்கத்தவர்.
அவரை பாதுகாத்து கதைக்கவேண்டிய எந்தவொரு தேவைக்காகவும் நான் இதை கதைக்கவில்லை .
இந்த அபத்தமான செயற்பாடானது நினைத்துப்ப்பார்க்கவே முடியாதளவுக்கு ,பயங்கரமான ஒரு பாசிசவாத ஆட்சியின் நடவடிக்கை ஆகும்.
நான் மிகவும் பொறுப்புணர்வுடன் இதை கூறுகிறேன். ஒருபுறம் நீங்கள் நாட்டை இராணுவமயப்படுத்துகிறீர்கள், மறுபுறம் இனவாதத்தை தூண்டி வளர்க்கிறீர்கள் . இன்னொருபுறம் எந்தவிதமான மாற்றுக்கருத்துகளையும் நீங்கள் தடைசெய்கிறீர்கள்.
இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு பாசிச ஆட்சியே என்பதை தவிர வேறெதுவும் இல்லை,

சபாநாயகர் அவர்களே!
இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இங்கே அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் உண்மையில் இந்த போக்கு குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த போக்கை நிறுத்தி கொள்ளுங்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post