வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியை வென்றது பெங்களூர் அணி - Yarl Voice வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியை வென்றது பெங்களூர் அணி - Yarl Voice

வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியை வென்றது பெங்களூர் அணி
வில்லியர்ஸ் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்ட முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வென்ற அசத்தியது பெங்களுர் அணி.

ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களுர் றோயல் அணியும் பலாப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணித்த தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றத்துக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கிறிஸ் லின் 49, சுரியகுமார் யாதல் 3,  இசான் கிசான் 28, ரோகித் சர்மா 19 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் பெங்களுர்சார்பில் ஜெமிசன் 1, ஹர்ஸ்சல் பட்டேல் 5, வோஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழத்தினர்.

160 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி பெங்களுர் றோயல் சலன்சர்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களுர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலி 33, மக்ஸ்வெல் 39, அதிரடி மன்னன் வில்லியர்ஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மும்பையின் மும்ரா 2, ஜெம்ஸன் 2, போலட், குருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஹர்ஸ்சல் பட்டேல் தெரிவானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post