திருகோணமலையில் குளமொன்றிற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு - Yarl Voice திருகோணமலையில் குளமொன்றிற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு - Yarl Voice

திருகோணமலையில் குளமொன்றிற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு
திருகோணமலை- தம்பலகாமம், பரவிபாஞ்சான் குளத்திற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று  காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (14 வயது), முள்ளிப்பொத்தானை- 95யினைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (14 வயது) ஆகிய சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து நீராடச் சென்றுள்ளனர். இதன்போதே இந்த இரு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது அதனை அவதானித்த சிலர் உடனடியாக சிறுவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்கைக்காக கொண்டுச் சென்ற வேளையில் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post