துறைமுக நகரத்தை ‘சீனாவின் மாநிலமாக’ மாற்ற சட்டமொன்றை நிறைவேற்ற அரசு முயற்சி - அனுரகுமார எச்சரிக்கை - Yarl Voice துறைமுக நகரத்தை ‘சீனாவின் மாநிலமாக’ மாற்ற சட்டமொன்றை நிறைவேற்ற அரசு முயற்சி - அனுரகுமார எச்சரிக்கை - Yarl Voice

துறைமுக நகரத்தை ‘சீனாவின் மாநிலமாக’ மாற்ற சட்டமொன்றை நிறைவேற்ற அரசு முயற்சி - அனுரகுமார எச்சரிக்கை




மக்கள்விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவின் ஊடக சந்திப்பு பத்தரமுல்ல மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த தேர்தலில் எமது நாட்டு மக்கள் பாராளுமன்றத்தில் 2/3இற்கு கிட்டிய அதிகாரத்தை இந்தஅரசாங்கத்திற்கு வழங்கினார்கள். மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களைத் தீர்த்துவைக்க பலமுள்ள அரசாங்கமொன்று வேண்டுமென்ற அடிப்படையிலேயே அவர்கள் பாரியஅதிகாரத்தை வேண்டிநின்றனர்.  அதைப்போலவே நாட்டின் எதிரில் இருக்கின்ற சவாலை வெற்றிகொள்ள பலம்பொருந்திய அரசாங்கமொன்று தேவை எனக் கூறினார்கள். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் 2/3 ஐ பயன்படுத்தி பாராளுமன்றத்தில் எதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்? 20-வது திருத்தத்தை அங்கீகரித்துக்கொண்டமை மூலமாக சனாதிபதி பாராளுமன்றத்தினதும் நீதிமன்றத்தினதும் அதிகாரத்தை தமக்கு கீழ் குவித்துக்கொண்டார். இரட்டைப் பிரசை பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நியமனம் பெறுவதற்கு இருந்ததடை நீக்கப்பட்டது. 20 மூலமாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும்  சனாதிபதியினதும் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. 

அதைப்போலவே கடந்த 09 ஆந் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் பற்றிய ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் விதப்புரைகளையும் அமுலாக்குவதற்கான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தின் முன்னிலையில் வைத்தது. அது அடுத்துறும் 21 ஆந் திகதி ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களினதும் அன்பர்களினதும்  70இற்கு மேற்பட்ட வழக்குகளை அகற்றிக்கொள்வதற்கான விதப்புரை சனாதிபதியவர்களால்  பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சனாதிபதியின் சார்பாக பிரதம அமைச்சரால் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஊழல்கள், திருட்டுகள் மற்றும் குற்றச்செயல்கள்சம்பந்தமான வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள இதன்மூலமாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மக்களிடம் கேட்பது நீங்கள் இதற்காகவா 2/3 அதிகாரத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தீர்கள்?

இந்தவழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் கையை உயர்த்த ஆவலுடன்இருப்பவர்கள் அந்த வழங்குகளில் பிரதிவாதிகளான கம்மன்பில, நாலக்க கொடஹேவாமார்களே.  இவைமத்தியில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான வழக்குகள், அவன்ற்காட் வழக்கு, பிள்ளைகளைக் கடத்திச்சென்று கொலை செய்தமை பற்றியவழக்கு, லசந்த வீரதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய,கீத் நொயாரைத் தாக்கியமையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலைசெய்ய இதன்மூலமாக பிரேரிக்கப்பட்டுள்ளது. 

இந்தவழக்குகளின் பிரதிவாதிகளை விடுதலை செய்தல் மாத்திரமன்றி இந்த குற்றச்சாட்டுகள்பற்றி விசாரணைகளை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு, வலக்ககளைத்தாக்கல் செய்த சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு, வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு, முறைப்பாட்டாளர்களுக்கு  எதிராக மீண்டும் வழக்குத்தொடர பிரேரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்காகவா தமது வாக்குகளை அளித்தோம் என நினைத்துப் பார்க்க இயலும்.

அதைப்போலவே அரசாங்கம் அண்மையில் தமது 2/3 அதிகாரத்தைப் பயன்படுத்தி கொழும்பு துறைமுக நகர பொருளாதாரஆணைக்குழு எனும் பெயரில் சட்டமூலமொன்றை சமர்ப்பித்தது. இந்த கொழும்பு நகரத்திற்கு அருகில் நிர்மாணித்த துறைமுக நகரத்தில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் 80% சைனா ஹாபர் கம்பெனிக்குஉரிமையானதாகும். இந்த கம்பெனி கடந்த காலத்தில் ராஜபக்ஷமார்களின் தேர்தல்களுக்காகவும் நிதியங்களுக்காகவும் பாரியளவில் பணத்தை பம்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. நாட்டின் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு வலயமாக பெயர்குறிக்குமாறு இந்த கம்பெனியிடமிருந்து அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. உண்மையிலேயே அதன் விளைவாகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகின்றது. 

முதலீட்டுச்சபை சட்டம் மற்றும் மூலோபாய அபிவிருத்திச்சட்டம் என்றவகையில் எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சட்டங்கள்இருக்கின்றன. அந்த சட்டங்கள் மூலமாக பாரியளவில் வரிச்சலுகைகளை வழங்க முடியும். ராஜபக்ஷமார்கள் ஷெங்கிரில்லா ஹோட்டலுக்கு 25 வருட வரிச் சலுகைகளைக் கொடுத்ததும் ரனில்மார்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்கையில் சீனக் கம்பெனிக்கு வரிச்சலுகைகளை வழங்கியதும் இந்த சட்டத்தின்  கீழாகும். அவ்வாறு இருக்கையில் அந்த சட்டங்களை அமுலாக்காமல்  துறைமுக நகரத்துடன் ஏற்புடைய ஆணைக்குழுவொன்றின்கீழ் தனியான மாநிலமொன்றுக்கு ஏற்புடைத்தாகின்ற அளவில் பெருந்தொகையான சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

🔸 அந்த துறைமுக நகரம் எந்தவோர் உள்ளூராட்சி நிறுவன ஆளுகைப்பிரதேசத்திற்கும் உரித்தாகாத  விசேட வலயமாகஅமையும்.

🔸 உள்ளூராட்சி நிறுவன ஆளுகைப் பிரதேசமானது அங்கு வசிக்கின்றமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது. ஆனால் துறைமுக நகரமானது சனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவொன்று மூலமாகவே நிர்வகிக்கப்படும்.

🔸 அந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு எதுவுமே புரிந்ததற்காக அல்லது புரியாமல் விட்டமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடியாத விடுபாட்டுரிமை இருக்கின்றது. அது சனாதிபதிக்கு இணையான விதத்தில் அமையாவிட்டாலும் அத்தகைய விடுபாட்டுரிமையாகும். 

🔸 இந்த ஆணைக்குழுவிற்கு விசேட நிதிசார் அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஆணைக்குழுவுக்கென தனிவேறான நிதியமொன்று உள்ளது. அரச வருமானம் ஒன்றுசேர்வது திரட்டு நிதியத்திற்கே. அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமானதாகும். எனினும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அதற்குப் புறம்பாக பாராளுமன்ற அங்கீகாரம் அவசியப்படாத தனிவேறானநிதியமொன்றை பேணிவர இயலும்.  

🔸 துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்ற அதிகாரம் கொண்டதாகும். பொதுவாக பாராளுமன்றத்தினால் மாத்திரமே வரிச்சலுகை வழங்க முடியும்.  ஆனால் இந்த ‘மாநிலத்திற்கு’ விசேட வரிச்சலுகை அதிகாரம்உரித்தானது. 

🔸 அரசிற்கு கிடைக்கின்ற பணம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மேற்பார்வைக்கு கட்டுப்படுகின்றது. எனினும் தனியார் நிறுவனமொன்று மூலமாகவே துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணம் கணக்காய்வு செய்யப்படுகின்றது. அது அரச கணக்காய்விலிருந்து அகற்றப்பட்டுள்ளது. 

🔸 அரச நிறுவனங்கள் பாராளுமன்றத்தின் கோபா  (COPA) மற்றும் கோப் (COPE) முன்னிலையில் வருமாறு அழைக்கப்படலாம். எனினும் இந்த ‘சீன மாநில’ நிர்வாகத்தை பாராளுமன்றத்தின் முன்னிலையில் தோற்றுமாறு அழைக்க இயலாது. 

🔸 இந்த துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர்களாலேயே முதலீடுசெய்ய இயலும். அது இலங்கையின் தொழில் முயற்சியாளர்கள் முதலீடுசெய்வதை மறைமுகமாக தடுத்து இருக்கின்றது. அந்த நிதியங்களை வெளிநாட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்பவரால் மாத்திரமே இங்கு முதலீடு செய்ய இயலுமென அறிவித்திருப்பதன் மூலமாகவே. அதன் சுருக்கமான அர்த்தம் இது தனிவேறான மாநிலமாக அமைவதாகும். 

🔸 இந்த துறைமுக நகர வலயத்தில் சேவையாற்றுபவர்களுக்கு சம்பளம் செலுத்துவதாயின் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டுப் பண அலகு மூலமாகவே எனகுறிப்பிடப்படுகின்றது. அது சீன ‘யுவான்’ ஆக முடியும்.

🔸  இங்கு சேவையாற்றுபவர்களின் வருமானம், வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை இந்நாட்டின் வெளிநாட்டு புழக்க கணக்கொன்றில் வைப்புச்செய்ய இயலுமெனபிரகடனஞ் செய்யப்படுகின்றது.  

🔸  இலங்கை பிரசைகள் கொழும்பு துறைமுக நகரத்தின் சேவைகளைபணம்செலுத்தி பெற்றுக்கொள்ள முடிகின்றபோதிலும் அதிலிருந்து வெளியில் செல்லும்போதுகொள்வனவு செய்த  பண்டங்களுக்கு வரி செலுத்தவேண்டும். இதன்மூலமாக இந்த வலயம் தனியான ஒரு நாடாக அமைகின்றதென்பது நிரூபணமாகின்றது.

🔸 துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆளுகைப் பிரதேசத்தில்சர்வதேச நடுத்தீர்ப்பு மூலமாகவே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.  உதாரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சர்வதேச சிட்டி வங்கியுடன் ஏற்படுத்தக்கொண்ட ஹெஜிங் உடன்படிக்கை பற்றிய பிணக்கு சிங்கப்பூர் நடுத்தீர்ப்புசபைக்கு  ஆற்றுப்படுத்தப்பட்டது. அது இராச்சியங்களுக்கிடையில் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்கின்ற வழிமுறையாகும். 

அதற்கிணங்க ஆணைக்குழுவிற்கும் நிறுவனங்களுக்கிடையிலும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலும் தோன்றுகின்ற பிணக்குகள் அங்கு தாபிக்கப்படுகின்ற சர்வதேச நடுத்தீர்ப்புச் சபையிடம் கையளிக்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மிகவும் முக்கியமன பலசட்டங்கள் இந்த மாநிலத்தில் அமுலில் இருக்கமாட்டாது.

 நிர்மாணத்துறை தொடர்பிலான அங்கீகாரங்களை வழங்குகின்ற தேசிய அரசுப்பேரவையின் 78 ஆம் இலக்கமுடைய நகரஅபிவிருத்தி அதிகாரசபைச்சட்டம், மாநகரசபை கட்டளைச்சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த நிலையச் சட்டம், நகர மற்றும்கிராம நிர்மாண கட்டளைச்சட்டம்,  பல்வேறு கருத்திட்டங்களுக்கான வரிச்சலுகை வழங்குகின்ற மூலோபாய அபிவிருத்திச்சட்டம், பொது ஒப்பந்த வேலைகள் உடன்படிக்கைச்சட்டம், பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுச்சட்டம் போன்ற சட்டங்கள் இந்த மாநிலத்திற்குள் அமுலாவதில்லை. 

பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுச்சட்டம் மூலமாகத்தான் அந்நிய செலாவணி பாதுகாக்கப்ட்டு வருகின்றது. இந்நாட்டில் வெளிநாட்டு பணம் பற்றிய அனைத்து தத்துவங்களும் ஒழுங்குவிதிகளும் இந்த சட்டத்தின் ஊடாகவே அமுலாக்கப்பட்டு வருகின்றன. 

அத்துடன்வருமான வரி பற்றிய சட்ட ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய உண்ணாட்டு அரசிறை சட்டம்,சேர் பெறுமதி வரி, 2002 இன் 11 ஆம் இலக்கமுடயநிதிச்சட்டம், 2002 இன் 05 ஆம் இலக்கமுடைய நிதிச்சட்டம்,  பண்டங்களின் ஏற்றுமதி –இறக்குமதி பற்றிய அதிகாரம்கொண்ட சுங்கக் கட்டளைச்சட்டம்,  துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வரியுடன் தொடர்புடைய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள்

 அபிவிருத்திச்சட்டம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சட்டம், பந்தயம் பிடித்தல் மற்றும் சூதாட்டச்சட்டம், தான்தோன்றித்தனமாக கம்பெனிகளின் விருப்பத்தின் பிரகாரம் ஊழியர்களை தொழிலில் இருந்து நீக்க இயலாத மற்றும் ஊழியர்களுடன் தொடர்புடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற தொழிலாளர்களின் தொழில்களை தொழில்களை முடிவுறுத்துகின்ற சட்டம், பொழுதுபோக்கு வரிச்சட்டம், அந்நிய செலாவணிச்சட்டம், கெசினோ தொழில்முயற்சி ஒழுங்குறுத்தல் சட்டம் போன்ற அனைத்துச் சட்டங்களையும் முழுமையாக விடுவிக்க அல்லது ஒருசில பிரிவுகளை திருத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. 

எனவே இந்த துறைமுக நகரத்தை சீன மாநிலமாக மாற்றுவதற்காக வேதிட்டங்கள்  தயாரிக்கப்பட்டு வருகின்றது. சீனாவுக்கு ஹொங்கொங் பற்றிய திட்டத்திற்கு இணையான திட்டமொன்றுதான் துறைமுக நகரக்கருத்திட்டம் சம்பந்தமாகவும் இருக்கின்றது. 

 அதைப்போலவே சனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இலங்கைப் பிரசைகளாக மாத்திரமே அமையவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படுவதில்லை.  

எனவே ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் சீனர்களா எனும் சந்தேகம் எழுகின்றது. இந்த அராங்கம் தேசப்பற்றுடைய, தேசிய வளங்களைப் பாதுகாக்கின்ற அரசாங்கமாகவே ஆட்சிபீடமேறியது.  

லிபரல் பொருளாதாரம் பற்றிய பாரிய விமர்சனத்தைக் கட்டியெழுப்பிய ஆட்சியாகும். முதலீட்டுச்சபை மற்றும் மூலோபாய அபிவிருத்திச் சட்டமே      பொருளாதார லிபரல் மயமாக்கலின் பிரதானமான அம்சமாகும்.

 சனாதிபதியினால் சனாதிபதி தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட லிபரல் பொருளாதாரத்திற்கு எதிரான கருத்து தேசிய பொருளாதாரம் பற்றிய வீம்பு வார்த்தைகளாக மாற்றப்பட்டு  நாட்டின் சட்டதிட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு பொருளாதாரம் சுதந்திரமாக்கப்பட உள்ளது.   

எமது நாட்டில் எஞ்சியுள்ள பொருளாதாரத்தின் முதுகெழும்பினை தகர்த்து பொருளாதாரத்தை பலம்பொருந்திய நாடுகளுக்கு  படைப்பதற்கான முயற்சியே தற்போது அமுலாக்கப்பட்டு வருகின்றது. 

எனவே இந்த செயற்பாங்கினை தோல்வியடையச் செய்விக்க வேண்டுமென்பதைப்போலவே இந்நாட்டுப் பிரசைகள் இதற்கு எதிராககுரல் கொடுக்கவேண்டும். அதைப்போலவே இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளஇயலுமா என எமது சட்டத்தரணிகள் குழு மூலமாக நாங்கள் கண்டறிவோம். 

ஆனால் அரசாங்கம் இந்த நாட்டின் நீதிமன்றத்தையும் தமது தேவைக்கிணங்க நெறிப்படுத்தக்கூடிய  நிலையமாக மாற்றிக்கொண்டு விட்டது. அது ஏன் என்பது தற்போது மிகவும் தெளிவாகி விட்டது. 20 வது திருத்தம் மூலமாக இதனாலேயே சனாதிபதி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டார்.

 இலங்கையுடன் தொடர்புடைய அனைத்துச்சட்டங்களையும்  மீறி   சீன அரசாங்கத்திற்கும் சைனா ஹாபர் கம்பெனிக்கும் தேவையான வகையில் மாநிலமொன்றைக் கட்டியெழுப்பத்தான் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்.....

நீங்கள் கூறியவாறு இந்த வலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவம் இயங்குவது பற்றி குறிப்பிடப்படவில்லை. எமது நாட்டின் அரசியல் அதிகாரம் பாராளுமன்றம், மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளிடமே அதிகாரம் கேந்திரமயமாகி இருக்கின்றது. ஆனால் இந்த மாநிலம் இந்த அதிகாரங்களிலிருந்து கைநழுவிச்சென்ற ஒன்றாகும்.

எமது நாடு நிதிச்சட்டங்களால் முடிச்சுப் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வலயத்திற்கு அந்த சட்டங்கள் ஏற்புடையதல்ல. அதைப்போலவே எமது நாட்டுக்கு பொதுவான புழக்கத்திலுள்ள பண அலகு ஒன்று இருக்கின்றது. 

 ஆனால் அந்த வலயத்தில் ரூபாவுக்குப் பதிலாக வேறோரு பண அலகு இயங்கி வருகின்றது. குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவ நடவடிக்கை ஊடாக எமது நாடு தேசிய பாதுகாப்பினால் கட்டிப்போட்ப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த வலயத்தில் பொலிஸிற்கும் இராணுவத்திற்கும் உள்ள அதிகாரங்கள் யாவை என்பது பற்றி தெளிவாகவில்லை. அதைப்போலவே அந்த வலயத்தில் எமது நாட்டுடன் ஏற்புடைய பொதுவான பகிரங்க சேவை நடைமுறையில் இல்லை. தனிவேறான சேவையொன்று அமுலாக்கப்பட உள்ளது. 

எனவே ஒரு நாடு என்றவகையில் ஒன்றாக கடப்பாடு கொள்ளக்கூடிய அனைத்துக் காரணிகளிலிருந்தும் இந்த வலயம்விடுவிக்கப்பட்டுள்ளது.  எனவேதான் நாங்கள் இதனை தனிவேறான சீன மாநிலம் எனக் கூறுகிறோம்.

அரசாங்கம்ரூபா 5000  கொடுப்பனவினை செலுத்த மேற்கொண்ட தீர்மானம் நல்லது. அரசாங்கம் இதைப்போல பல முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு கட்டத்தில் ரூபா 1000 பொருட்கள் பொதியொன்றை கொடுப்பதாகக் கூறியது. பொருட்களின் விலையைக் குறைப்பதாகக் கூறியது.

 பெருந்தொகையான வர்த்தமானிகளை வெளியிட்டது. அரசாங்கம்  சாத்தியமற்ற பல வைத்தியங்களை செய்தது. இறுதியாக ரூபா 5000 தீர்மானத்திற்கு வந்தது. தீர்மானம் எடுக்கும்போது வருடத்திற்கு முந்திய தினம் அரசாங்க விடுமுறைத் தினமாகும். 

இந்த ஆட்சியாளர்கள் நாடு பற்றியோ பொருளாதாரம்பற்றியோ மக்களின் சிரமங்கள் பற்றியோ எந்தவிதமன நோக்குமற்றவர்களாவர். கோட்டாபய தூரநோக்குடைய ஆட்சியாளரென பெரும்பாலானவர்கள் கூறினார்கள்.  ஆனால் கோட்டாபயவிற்கு தனது மூக்கின்  எல்லைகூடத் தெரிவதில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post