யாழில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு - Yarl Voice யாழில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு - Yarl Voice

யாழில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு
யாழ்ப்பாணம் மாநகரில் நல்லூர் பாணாங்குளம் பகுதியில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது.

அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்த சிலையை இன்று அவதானிக்க முடிந்தது.

எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post