சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு! - Yarl Voice சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு! - Yarl Voice

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு!சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடாத்தியது மற்றது. இச் சம்பவம் இன்று இரவு கொடிகாமம் பாலாவி காட்டுப் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

பாலவிப் பகுதியில் சுற்றுக் காவலில் ஈடுபட்ட இராணுவத்தினர், அவ் வழியே மணலுடன் வந்த உழவியத்திரத்தை மறித்துள்ளதாகவும் அவர்கள் இராணுவத்தினரை மோதித் தள்ள முற்பட்ட போது உழவியந்திரத்தின் சக்கரங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் மூன்று சக்கரங்கள் காற்றுப் போன நிலையில் அதில்ப் பயணித்த மூவரும் உழவியந்திரத்தை கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

உழவியந்திரத்தை கொடிகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, கடத்தல் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post