ஒரேயொரு சதம்…பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த சாம்சன்! - Yarl Voice ஒரேயொரு சதம்…பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த சாம்சன்! - Yarl Voice

ஒரேயொரு சதம்…பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த சாம்சன்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் 14ஆவது சீசனின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் (91), கிறிஸ் கெய்ல் (40), தீபக் ஹூடா (64) போன்றவர்கள் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பௌலர்களை மிரட்டினர். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 221/6 ரன்கள் குவித்தது.

மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் (0), மேனன் ஓரா (12) ஆகியோர் சிறப்பாக சோபிக்கவில்லை. அடுத்துக் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அறிமுக கேப்டன் முதல் போட்டியிலேயே சதம் எடுத்தது இதுதான் முதல்முறை.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணிக் கேப்டன் சாம்சன் 63 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 119 ரன்கள் குவித்து அசத்தி, இதன்மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

தோல்வியடைந்த ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:

128* ரிஷப் பந்த் DD vs SRH 2018

119 சஞ்சு சாம்சன் RR vs PBKS 2021

117* சைமண்ஸ் DC vs RR 2008

0/Post a Comment/Comments

Previous Post Next Post