யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு யாழ் வணிகர் கழகத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜாவிடம் யாழ் வணிகர் கழகத் தலைவர் இந்த உதவிப் பொருட்களை கையளித்தார்.
கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு உதவிப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள வனிகர் கழகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதி பணிப்பாளர் தலைமையிலான வைத்தியசாலை நிர்வாகத்தினரும் வணிகர் கழகத் தலைவர் தலைமையிலான வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment