சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை - Yarl Voice சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை - Yarl Voice

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர் எச்சரிக்கைசுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இன்று ) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நேற்றைய அறிக்கையின்படி கொரோனா பரவல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்க அதிபர்களூடாக மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் அவற்றை மீறுபவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்” என கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post