இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வேதனையளிக்கிறது - மாவை சேனாதிராசா - Yarl Voice இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வேதனையளிக்கிறது - மாவை சேனாதிராசா - Yarl Voice

இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வேதனையளிக்கிறது - மாவை சேனாதிராசாஇந்திய நாட்டில் கொரோனா வைரஸ்
தாக்கம் வேதனையளிக்கிறது என இ.த.அ.கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பு துணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கையி;ல் சென்ற ஜனவரி முதல் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்து வந்த பொழுது இந்திய அரசு, பிரதமர் மோடி அவர்கள் உத்தரவின்படி ஐந்து இலட்சம் ஒக்ஸ்போட் அஸ்ட்ரா செனகா (ழுஒகழசன யுளவசய ணுநநெஉய ஏயஉஉiniநெ ) 
தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியது. 

இப்பேருதவியினால் இலங்கையில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பட்டது. நான் கூட இத் 
தடுப்பூசியைப் போட்டுள்ளேன். 
இதனால் பெருமளவில் கொரோனா வைரஸ் நோயாளர் நன்மையடைந்தனர் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீடம் பல ஆய்வுகளின் பின் அறிவித்துள்ளது. 

இன்னும் பல இலட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கையில் தற்போது மூன்றாவது அலை பரவுகின்றது. 

ஆனால் இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அண்மைய நாட்களில் நாளொன்றுக்கு (323000) மூன்று அரை இ;லட்சத்தை அண்மித்தளவுக்கு பரவி வருகின்றது.

 நாளொன்றுக்கு மரணங்களும்; 2771 ஆக உயர்ந்து வருகின்றமை மிகப் 
பெரும் பாதகமான நெஞ்சை உலுக்குகின்ற செய்தியாக விருக்கின்றது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைவர் 'டெட்ரோஸ் அதனேம் கெப்ரேயஸ்' குறிப்பிடுகின்றார். 

இந்நிலமை குறிப்பாக மகாராஸ்டராவிலும், நம்முறவுகள் வாழும் 
தமிழ்நாட்டிலும் பெருகிப் பரவுகின்றமையும் பெரும் கவலையளிக்கின்றது. 
அதனைவிட இந்திய நாட்டில் மருத்துவ ஒக்ஷpயின் (ஆநனiஉயட ழுஒலநn) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையாலும் மரணங்களும் ஏற்படுவது பெரும் பாதகம். 

ஒட்டுமொத்தமாக இந்திய நாட்டில் 17.6மில்லியன் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 197894 மரணங்களும் ஏற்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகின்றது.

 இரண்டாவது அலை ஏற்;பட்ட நிலையில் 
பிரித்தானியாவுக்கு அடுத்தபடியாக விருந்த தொற்று இப்போது இந்தியாவில் கூடி வருகின்றமை தான் பாரதூரமானது. 
இந்திய நாட்டில் அண்மையி;ல் நடைபெற்ற தேர்தல் காலங்களிலும் இந்துக் கோவில் விழாக்களிலும் பெருந்திரளான மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் பெருமளவில் திரண்ட நிகழ்வுகள் தான் இத்தனைதூரம் கொரோனா வைரஸின் 
தீவிரத்திற்க்கு காரணமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இவற்றை இலங்கை மக்களும் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும். 
உலகப் பொருளாதாரம் மட்டுமல்ல இந்தியாவிலும், இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி பாராதூரமான நிலைமைகளை அடையப் போகின்றது.

இதனால் போரினால் பாதிக்கபட்ட வடக்குக் கிழக்கு மக்களும் மிகமோசமான பொருளாதாரப் பாதிப்புக்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படப் போகின்றது.

இலங்கை நாட்டுக்கு முதலிலும் தொடர்ந்தும் மக்களை இந்நோயிலிருந்து பாதுகாத்த இந்திய நாட்டிலேயே கொரோனா நோய் பெருமளவில் பரவி வருகின்றமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென நாமும் 
பிரார்த்திக்கின்றோம். ஏற்பட்ட மரணங்களுக்காகவும் எம் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post