வில்லியர்ஸ் அதிரடி; சிராஜ் மாஜயாலம் டெல்லியை வீழ்த்தியது பெங்களுர் - Yarl Voice வில்லியர்ஸ் அதிரடி; சிராஜ் மாஜயாலம் டெல்லியை வீழ்த்தியது பெங்களுர் - Yarl Voice

வில்லியர்ஸ் அதிரடி; சிராஜ் மாஜயாலம் டெல்லியை வீழ்த்தியது பெங்களுர்
ஏபிடி வில்லியர்ஸ் அதிரடிகாட்ட சிராஜ் இறுதி ஓவரில் மாஜயாலம்காட்ட ஒரு ஓட்டத்தால் டில்லியை வீழத்தி திரில் வெற்றி பெற்றது பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ்.

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. பெங்களுருக்கு  எதிராக டெல்லி கப்பிட்டல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் விராட் கோலி 12, படிக்கல் 17 ஓட்டத்திலும் வெறியேற மேக்ஸ்வெல் 25 வெளியேற 3 ஆவது வீரராக களம் இறங்கிய ராஜத் படிதார் நம்பிக்கையுடன் விளையாடினார்.

 அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். படிதார் ; 31 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்  6 ஓட்டத்தில் வெளியேறினார்.

ஏபிடி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ஓட்டங்கள் விளாச பெங்களுர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை  அடித்துள்ளது. 

டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 172 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பிரித்திவிஷோ 21, மார்க் ரோனிஸ் 22 ஓட்டங்கள் எடுக்க ரிசப்பாண்ட் - ஹெட்மயர் ஜோடி பெங்களுரின் பந்துவீச்சை துவம்செய்தனர். இறுதிவரை போராடிய இந்த ஜோடி வெற்றிக்க அருக்கில் வந்து 1 ஓட்டங்களால் தோல்லியை தழுவியது.

 ரிசப் பாண்ட் 58, ஹெட்மயர் 53 ஓட்டங்களை எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை எடுத்தது.

இறுதி ஓவரில் சிராஸ் சிறப்பாக பந்துவீசினார். பந்துவீச்சில் ஹர்சல் பட்டேல் 2, ஜெமிசன், சிராச் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் பெங்களுர் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post