கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் - Yarl Voice கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் - Yarl Voice

கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்இங்கிலாந்து - இந்தியா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 26ஆம் திகதி இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார். 

அவரது இந்திய வருகையின்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள போரிஸ் ஜோன்சன் முடிவு செய்துள்ளார். 

இந்தத் தகவலை தெரிவித்த அவரது செய்தித் தொடர்பாளர், ஜோன்சனின் பயணத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று கூறினார். 

கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்த போரிஸ் ஜோன்சனின் பயணம், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post