யாழில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice யாழில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழப்புயாழ்ப்பாணம் - வரமராட்சி அல்வாய் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இரு குழுக்களுக்கு இடையில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியினைச் சேர்ந்த 31 வயதான முருகதாசா கெளிகன் என்னும் 2 பிள்ளைகளின் தந்தையே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

குறித்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த விருந்துபசார நிகழ்வில் மதுபானமும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு மது அருந்திய இரு குழுக்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடு மோதலாக மாறி இரு குழுக்களும் தமக்கிடையில் வாள்களால் வெட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

இம்மோதல் சம்பவத்தில் 31 வயதான முருகதாசா கெளிகன் என்னும் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

மேலும் இச் சம்பவத்தில் 4 பேர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post