- Yarl Voice - Yarl Voice




ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளைய தினம் யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிக்களார் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜெபரட்ணம் அடிக்களார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.....

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தென் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதிப்படைந்த மக்களுக்கான  இரண்டாவது ஆண்டு நிகழ்வு நாளை புதன்கிழமை 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் கட்டுவப்பிட்டி  செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் இருக்கின்ற உல்லாச விடுதிகள் இவைகளில் இடம்பெற்ற பயங்கரமான குண்டு  வெடிப்பிலே நூற்றுக்கணக்கான மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள் பலர் அங்கவீனமானார்கள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இதனுடைய இரண்டாவது ஆண்டு நினைவை நாடு முழுவதும் அனுஷ்டித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையினையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கொழும்பு உயர் மறைமாவட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதன்படி நாளைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திலும் கட்டுவாப்பிட்டிய செபஸ்தியர் ஆலையத்தின் நினைவு அஞ்சலி களும் ஆராதனைகளும் திருப்பலிகளும் ஒப்புக் கொடுக்கப் படுகின்றன ஏனைய மாவட்டங்களிலும் இந்த நினைவு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன எங்களுடைய யாழ்  மறை மாவட்டத்திலே உள்ள ஆலயங்களில் ஆலயங்களிலே 08:45 க்கு ஆலயமணி ஒலிக்கப்பட்டு மௌன அஞ்சலி கள் இடம்பெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன எனவே அனைத்து மக்களும் அந்த பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் அத்தோடு அரசாங்கத்தினால்  நினைவஞ்சலியினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே ஈஸ்டர் தாக்குதல் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிகள் நாளை காலை மரியன்னை ஆலயத்தில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post