நடிகர் விவேக் உயிரிழப்பு - Yarl Voice நடிகர் விவேக் உயிரிழப்பு - Yarl Voice

நடிகர் விவேக் உயிரிழப்பு



மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (59 வயதில்) இன்று அதிகாலை காலமானார். 

விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு  அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 விவேக்கின் மரணம் திரைத் துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post