மேலதிக பாதுகாப்பை கோரினார் விஜயதாச ராஜபக்ச - Yarl Voice மேலதிக பாதுகாப்பை கோரினார் விஜயதாச ராஜபக்ச - Yarl Voice

மேலதிக பாதுகாப்பை கோரினார் விஜயதாச ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தனக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு கோரும் கடிதமொன்றை பொலிஸ் அதிபரிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மிரட்டினார் என குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே விஜயதாச ராஜபக்ச தனக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளார்.
ஜனாதிபதி தொலைபேசி உரையாடலின் போது பயன்படுத்திய வார்த்தைகள் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து எற்படலாம் என தான் அச்சமடைந்துள்ளதால் பொலிஸ்மா அதிபரை உடடினயாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பயன்படுத்திய வார்த்தைகள் ஒரு நாட்டின் தலைவர் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச கொழும்புதுறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்தும் அரசாங்க்தின் திட்டங்கள் குறித்தும் பசில் ராஜபக்ச குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.;

0/Post a Comment/Comments

Previous Post Next Post