யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து இடமாற்றம் கோரும் அதிகாரிகளும் இடமாற்றப்படும் அதிகாரிகளும் - Yarl Voice யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து இடமாற்றம் கோரும் அதிகாரிகளும் இடமாற்றப்படும் அதிகாரிகளும் - Yarl Voice

யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து இடமாற்றம் கோரும் அதிகாரிகளும் இடமாற்றப்படும் அதிகாரிகளும்




யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மற்றுமோர் மூத்த அதிகாரி தன்னை மாவட்டச் செயலக நிர்வாகத்தில் இருந்து  இடமாற்றக் கோரி அமைச்சிற்கு விண்ணப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு உட்பட்ட நிர்வாகத்தின் கீழ் நீண்ட காலமாக பணியாற்றிய அதிகாரி ஒருவரே இவ்வாறு மாற்றலாகிச் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.

 இவரது விண்ணப்பம் தற்போதுதான் அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அமைச்சினால் இதுவரை அதற்கான பதில் வழங்கப்படவில்லை.

குறித்த இடமாற்ற விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால் இடமாற்றலாகிச் செல்லும் அதிகாரியின் இடத்தினைப் பிடிக்க சில அதிகாரிகள் தற்போதே முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் புதிய அரசு பதவி ஏற்ற காலம் முதல் பலர் தூக்கி எறியப்படவும் மேலும் சிலர் அழுத்தம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் செல்வதும் அதிகரித்துள்து.

0/Post a Comment/Comments

Previous Post Next Post