அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் - பிரதமர் - Yarl Voice அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் - பிரதமர் - Yarl Voice

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் - பிரதமர்


 

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் அவர்களை தடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் வெளியேறி வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவர்கள் செல்வதற்கான கதவு திறந்திருக்கின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை எவருக்கும் உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தாங்கள் அங்கத்துவம் வகிக்கின்ற அரசாங்கத்தையே அவர்கள் விமர்சிக்க விரும்பினால் அவர்கள் அதிலிருந்து வெளியேறுவததை எவரும் கட்டுப்படுத்தவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் பிரபலமாக விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருந்து அதனை விமர்சிக்காமல் தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எடுக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post