கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி விட்டது - சரத் பொன்சேகா - Yarl Voice கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி விட்டது - சரத் பொன்சேகா - Yarl Voice

கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி விட்டது - சரத் பொன்சேகா
அரசாங்கம் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப் பிலிருந்து விலகி விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களின் ஆரோக்கியத்தை தாங்களாகவே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டின் காரண மாகவே நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவ ஏதுவாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் அரசாங்கம் இதையாவது வெற்றி கரமாகச் செய்யவேண்டும். செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஆனால் இதைத் தவறினால் கொரோனா தடுக்கும் விடயத்தில் முழுமை யாக அரசு தோல்வியடைந்து விட்டது என நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post