யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து தீவிர விசாரணை- பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன - Yarl Voice யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து தீவிர விசாரணை- பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன - Yarl Voice

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து தீவிர விசாரணை- பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன
யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ். மாநகரத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொருட்டு, மாநகர சபையினால் மாநகர காவல் படை ஒன்று நேற்று தமது பணியை ஆரம்பித்தது. இதற்குப் பிரத்தியேகமாக சீருடை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post