யாழில் பிசிஆர் பரிசோதனை செய்யாத எவரும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை - வணிகர் கழகம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice யாழில் பிசிஆர் பரிசோதனை செய்யாத எவரும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை - வணிகர் கழகம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

யாழில் பிசிஆர் பரிசோதனை செய்யாத எவரும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை - வணிகர் கழகம் விடுத்துள்ள கோரிக்கையாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களில் இதுவரை பி.சிஆர் பரிசோதனை செய்யாதவர்கள் மற்றும் ஏற்கனவே பி;.சி;ஆர் பரிசோதனை மேற்கொண்டு இரண்டாவது 
பி;.சி.ஆர் பரிசோதனை செய்யாதவர்கள் இருப்பின்;; 

நாளை 09.04.2021 வெள்ளிக்கிழமை 
காலை 7.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பி.சி.ஆர் பரிசோதனையில் 
கலந்து கொண்டு தங்களுக்குரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ் சுகாதார வைத்திய 
அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத எவரும் வர்த்தக நிலையங்களை திறக்கவோ வர்த்தக நிலையங்களில் பணிபுரியவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் எந்த சுகாதாரப் பிரிவை 
கொண்டிருந்தாலும் அனைவரும் இப்பரிசோதனையில் கலந்து கொள்ள முடியும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடக்கப்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களைச் 
சேர்ந்தவர்களும் பி.சி.ஆர்; பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் 
கேட்டுக்கொள்கின்றது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post