தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் யாழில் உயர்மட்ட கலந்துரையாடல் - Yarl Voice தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் யாழில் உயர்மட்ட கலந்துரையாடல் - Yarl Voice

தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் யாழில் உயர்மட்ட கலந்துரையாடல்



புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால்  2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்று (30.04.2021) மதியம் 1  மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்  கூடத்தில் சுகாதார விதிமுறைகளிற்கு அமைவாக இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில்,  வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரர், வணக்கத்திற்குரிய விகாராதிபதிகள்,
புத்தசாசன அமைச்சின் செயலாளர், 
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினர், பொலிஸார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு அதற்கேற்றவாறு தேசிய வெஷாக் பண்டிகை நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட நாகதீப ராஜமகாவிகாரையில் நடைபெறவுள்ளமையினால் தேசிய வெஷாக்  பண்டிகை முன்னாயத்த செயற்பாடுகள் திணைக்களங்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

 அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட முன்னாயத்த செயற்பாடுகளின் கள நிலவரங்கள் மற்றும் கடந்த சில வாரங்களாக  நடைபெற்ற தேசிய வெசாக் பண்டிகைக்கான கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னேற்பாட்டு வேலைகளுக்கான  செயற்பாடுகளின் தற்போதைய நிலை பற்றி விரிவாக  கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து வசதிகள், வாகன தரிப்பிட வசதிகள், மலசலகூட வசதிகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஊடக நேரடி ஒளி பரப்பு முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post