போல்ட், பும்ரா பந்துவீச்சில் திண்டாடியது கொல்கத்தா - மும்பை திரில் வெற்றி - Yarl Voice போல்ட், பும்ரா பந்துவீச்சில் திண்டாடியது கொல்கத்தா - மும்பை திரில் வெற்றி - Yarl Voice

போல்ட், பும்ரா பந்துவீச்சில் திண்டாடியது கொல்கத்தா - மும்பை திரில் வெற்றி
இறுதி பந்து பரிமாற்றத்தில் போல்ட், பும்ரா அதிரடி காட்ட மும்பையிடம் வீழ்ந்தது கொல்கத்தா அணி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.  நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குயின்டன் டி காக் 2 ஓட்டத்தில்; வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்களை ஷ் விளாசினர்.

அதன்பின் வந்த இஷான் கிஷன் 1 ஓட்டத்துடன் வெளியேற மறுமுனையில் ரோகித் சர்மா 43 ஓட்டத்தில் வெளியேறினார். 

இறுதிவரை போராடிய மும்பை  20 ஓவரில் 152 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.  

பந்துவீச்சில் அந்த்ரே ரஸல் 4 ஓவரில் 15 ஓட்டங்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

ஹர்திக் பாண்ட்யா 15, குருணால் பாண்ட்யா 15,  ராகுல் சாஹர் 8 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.

153 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராணா 57, ஜில் 33 நல்ல துவக்கம் கொடுத்த போதும் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இறுதியில் கொல்கத்தா 142 ஓட்டங்களை மடும் எடுத்து 10 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பந்துவிச்சில் ராகுல் சகார் 4, போல்ட் 2, குருணல் பாண்டியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post