அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த சீனா ! அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா ! - Yarl Voice அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த சீனா ! அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா ! - Yarl Voice

அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த சீனா ! அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா !"தைவான் விடயத்தில் நெருப்போடு விளையாடுவதை நிறுத்தவும்"  என அமெரிக்காவிற்கு சீனா எச்சரித்துள்ளது. 

அமெரிக்க அதிகாரிகள் தைவான் அதிகாரிகளை இலகுவாக சந்திக்க கூடிய ஏற்பாடுகள் செய்யபட்டதை அடுத்து இவ்வாறு எச்சரித்த சீனா உடனடியாக அனைத்து அமெரிக்க தைவான் தொடர்புகளையும்  நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளது. 

இந்த விடயத்தை எச்சரிக்கையுடனும் சரியான முறையிலும் கையாளவும் எனவும், தைவான் சுதந்திர படைகளுக்கு தவறான சமிக்கைகளை அனுப்ப வேண்டாம் என்றும் மேலும் சீனா எச்சரித்துள்ளது.

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே இன்னமும் சீனா கருதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post