உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுதான் காரணமா? காரணத்தை மக்களுக்கு கூறுகிறார் பேராயர் - Yarl Voice உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுதான் காரணமா? காரணத்தை மக்களுக்கு கூறுகிறார் பேராயர் - Yarl Voice

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுதான் காரணமா? காரணத்தை மக்களுக்கு கூறுகிறார் பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கானதே என்று பேராயர் கார்த்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொரளை மயானபூமியில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வேளையிலேயே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேராயர் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த தாக்குதல் அடிப்படைவாதிகளை சிப்பாய்களாக்கிக்கொண்டு தமது அரசியல் அதிகாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டவொன்று. இது மத அடிப்படைவாத தாக்குதல் அல்ல.  

மதம், இனம், மொழி ஆகியவற்றினால் இன்னொருவரை வேதனைப் படுத்துவதற்கும் அரசியல் அதிகார பலத்தை காண்பிப்பதற்கும் கொலை செய்யும் கருத்தியலை பயன்படுத்துவதை மாற்றிக் கொள்ளும்படி அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post