அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கம்! - Yarl Voice அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கம்! - Yarl Voice

அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கம்!
நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. 

நடிகரும் விவேக்கின் மேலாளருமான செல் முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார். செல் முருகன் விவேக்குடன் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

வையாபுரி மூலம் நடிகர் விவேக்கிற்கு அறிமுகமான செல் முருகன், பின்னர் அவரிடமே மேலாளரானார். 

பல படங்களில் விவேக்குடன் இணைந்து சிறுசிறு காமெடி வேடங்களில் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உட்பட பல படங்களில் அவர்களின் நகைச்சுவை கூட்டணி பெரும் ஹிட்டானது.

நடிகர் விவேக்கையே முழுக்க முழுக்க நம்பியிருந்தார் செல் முருகன். விவேக்கின் இறுதிச்சடங்கிலும் கூட கூட்டத்தில் தொலைந்த குழந்தை திக்கற்று கதறுவதை போன்று கதறிக் கொண்டே இருந்தார் செல் முருகன். 

அவரின் கதறல் போட்டோக்கள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது.

கடைசியாக விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது அவருடன் சேர்ந்து தானும் தடுப்பூசி கொண்டார். 

அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த செல் முருகன், நானும் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் செல் முருகன், அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல என்று ஒரு உருக்கமான பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, 

ஓர் மரணம் என்ன செய்யும் 
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள் சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள் சிலர் RIPபுடன் கடந்த போவார்கள் 

சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள் 

ஆனால் அண்ணா... உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! 

இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார்? துணை விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார்? துணை.. யார்? துணை.... யார்? துணை...... இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post