ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் யாழிலும் இடம்பெற்றது - Yarl Voice ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் யாழிலும் இடம்பெற்றது - Yarl Voice

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் யாழிலும் இடம்பெற்றது
ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 

2 ஆயிரத்து 19ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.

அன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் , தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.   

யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு , மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும்  இடம்பெற்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post