இந்தியாவின் மும்பாயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஊழியர்- குவியும் பாராட்டுக்கள் - Yarl Voice இந்தியாவின் மும்பாயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஊழியர்- குவியும் பாராட்டுக்கள் - Yarl Voice

இந்தியாவின் மும்பாயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஊழியர்- குவியும் பாராட்டுக்கள்
தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மராட்டிய மாநிலம் மும்பை சராகத்திற்குட்பட்ட வாங்கனி ரயில்வே நிலையத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் கடந்த 19-ம் தேதி ஒரு பெண் மற்றும் குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த 6 வயது குழந்தை திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்தது. 

உடனே என்ன செய்வதென்று தெரியாமல் அந்த குழந்தையின் தாய் திகைத்து நின்ற நிலையில் தண்டவாளத்தில் விரைவு ரயிலும் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, தண்டவாளத்தில் வேகமாக ஓடிவந்த ரயில்நிலைய பணியாளர் மயுர் ஷெல்கே மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையை மேலே தூக்கி விட்டதுடன், ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை மத்திய ரயில்வே டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

சரியான நேரத்தில் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்ட ரயில்நிலைய பணியாளர் மயுர் ஷெல்கேவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

மேலும், மயுர் ஷெல்கேவுக்கு சன்மானமாக 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post