நாட்டை உடனடியாக முடக்குங்கள் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதியுங்கள் - பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து - Yarl Voice நாட்டை உடனடியாக முடக்குங்கள் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதியுங்கள் - பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து - Yarl Voice

நாட்டை உடனடியாக முடக்குங்கள் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதியுங்கள் - பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து
நாடு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என எச்சரித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் முழுமையான முடக்கல்அல்லதுபோக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு தாங்கள் விடுத்த வேண்டுகோளை  அரசாங்கம் அலட்சியம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் அச்சம்தரும் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியையும்  சுகாதார அமைச்சின் செயலாளரையும் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தாமதமாகின்றது என தெரிவித்துள்ள உபுல்ரோஹன மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படும் நோயாளிகள் வீடுகளிலேயே உள்ளனர்,இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும்ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளால் சாதகமான விளைவுகள் ஏற்படவில்லை,சுவசெரிய அம்புலன்ஸ் சேவையால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க முடியாதநிலை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களிற்கு ஒரு நோயாளியை வீட்டிலிருந்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான்கு மணித்தியாலங்களாகின்றன இதன் காரணமாக அரசாங்கம் நாட்டை உடனடியாக முடக்கவேண்டும், அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டு;ம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post