ஊடகவியலாளர் அமரர் ரூபனுக்கு பொன்னாலையில் நினைவேந்தல்! -சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது- - Yarl Voice ஊடகவியலாளர் அமரர் ரூபனுக்கு பொன்னாலையில் நினைவேந்தல்! -சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது- - Yarl Voice

ஊடகவியலாளர் அமரர் ரூபனுக்கு பொன்னாலையில் நினைவேந்தல்! -சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது-ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது, ரூபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

ஊடகப்பணியாளரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா, பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன், வெண்கரம் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் திருமதி சு.சண்முகேந்திரன் மற்றும் பொன்னாலை ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் உள்ளிட்டோர் நினைவுரைகளை ஆற்றினர்.

கொவிட்-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக குறிப்பிட்ட சில மாணவர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சமூக செயற்பாட்டாளர்களுடன் இந்த நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post