ஒக்சிசனை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களிற்கு அனுப்ப வேண்டாம்- பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் - Yarl Voice ஒக்சிசனை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களிற்கு அனுப்ப வேண்டாம்- பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் - Yarl Voice

ஒக்சிசனை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களிற்கு அனுப்ப வேண்டாம்- பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 
தமிழக ஒக்சிசனை வேறு மாநிலங்களிற்கு மத்திய அரசாங்கம் அனுப்பகூடாது என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துசென்றால் தமிழகத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.
 
இதனால் தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்திற்கு 220 மெ.டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தவறான கணக்கீடு செய்துள்ளது. தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்திற்கு 310 மெ.டன் ஆக்சிஜன் தேவைப்படும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post