ஹரின் பெர்னாண்டோவுக்காக சர்வதேச சமூகத்திடம் நாங்கள் செல்லத் தயார் - கபீர் ஹாசிம் - Yarl Voice ஹரின் பெர்னாண்டோவுக்காக சர்வதேச சமூகத்திடம் நாங்கள் செல்லத் தயார் - கபீர் ஹாசிம் - Yarl Voice

ஹரின் பெர்னாண்டோவுக்காக சர்வதேச சமூகத்திடம் நாங்கள் செல்லத் தயார் - கபீர் ஹாசிம்
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை குறிவைத்து  அர சியல் சூழ்ச்சி ஒன்றை  மேற்கொள்ள அரசாங்கம் முயன்றால் சர்வதேச சமூகத்திடம் நாங்கள் செல்லத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஹரின் பெர்னாண்டோவுக்காக எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றாகக் கைகோர்த்திருப்போம். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவைக் குறி வைத்து அரசியல் சூழ்ச்சி ஒன்றை  மேற்கொள்ள அரசாங்கம் முயன்றால் சர்வதேசத்திடம் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post