விஜய் டிவி விருது விழாவில் பலரையும் கலங்க வைத்த டிடியின் உருக்கமான பேச்சு.. வைரலாகும் வீடியோ! - Yarl Voice விஜய் டிவி விருது விழாவில் பலரையும் கலங்க வைத்த டிடியின் உருக்கமான பேச்சு.. வைரலாகும் வீடியோ! - Yarl Voice

விஜய் டிவி விருது விழாவில் பலரையும் கலங்க வைத்த டிடியின் உருக்கமான பேச்சு.. வைரலாகும் வீடியோ!விஜய் டிவி விருது விழாவில் தொகுப்பாளினி டிடி பேசிய உருக்கமான பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. தொகுப்பாளராக மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார். ஏராளமான பிரபலங்களை நண்பர்களாக கொண்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு போட்டியாக பிகினி, மாடர்ன் உடை என கலக்கலாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தினார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.

அவ்வப்போது வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு குஷிப்படுத்தி வரும் டிடி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு பலரையும் கலங்க செய்துள்ளார். அதாவது விஜய் டிவியின் விருது விழா அண்மையில் நடைபெற்றது.

அதில் டிடி பேசிய உருக்கமான பேச்சின் க்ளீப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் டிடி பேசியிருப்பதாவது, கேர்ள்ஸோ பாய்ஸோ யாரோ, நீங்க தப்பான ஒரு பொருளை கையில எடுத்துட்டீங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சா யோசிக்காம அதை கீழ வச்சுடுங்க.

அய்யோ நம்ம கீழ வைக்கலன்னா அவன் ஏதாவது சொல்லிடுவான், இவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு அதை கையிலேயே வச்சுருக்காதீங்க. அது உங்கள் வாழ்க்கையை எடுத்துடும். அவன் பேசிருவானோ இவன் பேசிருவானோன்னு பயந்து கீழ் வைக்காம இருக்கீங்கல்ல, நீங்க வச்சதுக்கு அப்புறம் எவனும் அதைப்பத்தி யோசிக்கக்கூட மாட்டான்

ரெண்டு நாள்தான். தயவு செய்து தப்பான பொருள எடுத்திங்கன்னா தயவு செய்து வச்சுருங்க என உருக்கமாக பேசியுள்ளார் டிடி. டிடியின் இந்த பேச்சை கேட்டு அங்கு அமர்ந்திருக்கும் சீரியல் பிரபலங்கள் கண்கள் கலங்கி கைகளை தட்டி ஆமோதித்துள்ளனர்.

தொகுப்பாளினி டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இறுதியாக 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post