அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice

அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் - சபா குகதாஸ் வலியுறுத்துஅனைத்து அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் நிலையான அமைதியும் இனங்களிடையே நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட பாரபட்சமின்றி நாட்டில் உள்ள அனைத்து இன, மத அடிப்படைவாத அமைப்புக்களை தடைசெய்யவதே உண்மையான ஐனநாயகம் ஆகும்.

ஆட்சியாளர்கள் ஒரு தலைப் பட்சமாக சில இனங்களை குறிவைத்து தடை செய்தல் அடக்குமுறைகளை ஏற்படுத்தல் அவர்கள் கூறிவரும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாட்டை அவர்களே  கேள்விக்குள்ளாக்கியதை வெளிப்படுத்தியுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்தார்கள் அத்துடன்  இலங்கை ஐனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆட்சி புரிந்து கொண்டு பல இனமக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபாண்மைச் சமூகங்களை குறிவைத்து அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தல் நிலையான ஐனநாயகத்திற்கு ஆரோக்கியமாக அமைய சாத்தியமில்லை.

பெரும்பாண்மை இனத்தின் அடிப்படைவாத அமைப்புக்களை ஆட்சியாளர் தங்களின் தேவைக்காக மறைமுகமாக ஆதரித்தல் நாட்டின் அமைதிக்கும் சீரான ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.
   
இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கை பூர்வீக தாயகமாக கொண்டு அதி உச்ச அதிகாரப் பகிர்வை வேண்டி போராடும் மக்கள் மிக அவதானம் தற்போது  சில சக்திகள் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தொடர்ந்து தமிழர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழர் தேசமாக ஓரணியில் ஒற்றுமையாக பிரதேச வேறுபாடுகளை களைந்து வலுப் பெறுவதே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாகும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post