தன்னை தத்ரூபமாய் வரைந்த ரசிகர்களுக்கு.. உலக ஓவிய தினத்தில் மொத்தமாய் வெளியிட்டு நன்றி கூறிய பிரபல நடிகை! - Yarl Voice தன்னை தத்ரூபமாய் வரைந்த ரசிகர்களுக்கு.. உலக ஓவிய தினத்தில் மொத்தமாய் வெளியிட்டு நன்றி கூறிய பிரபல நடிகை! - Yarl Voice

தன்னை தத்ரூபமாய் வரைந்த ரசிகர்களுக்கு.. உலக ஓவிய தினத்தில் மொத்தமாய் வெளியிட்டு நன்றி கூறிய பிரபல நடிகை!
தன்னை தத்ரூபமாய் வரைந்து அனுப்பிய ரசிகர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி கூறியுள்ளார். உலக ஓவிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

யுனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதியான நேற்றும் உலக ஓவிய தினம் கொண்டாடப்பட்டது. 

இதனை முன்னிட்டு தன்னை ஓவியமாக வரைந்து அனுப்பிய ரசிகர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி கூறியுள்ளார்.மேலும் இதுவரை தனக்கு அனுப்பப்பட்ட ஓவியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

அந்த வீடியோவில் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் கலை தினத்தை உருவாக்குகிறார்கள் என்றும் அவர்கள் தங்கள் கலையால் தன்னுடைய இதயத்தை வென்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவற்றில் இது சில மட்டுமே.. உங்களின் அன்புக்கு நன்றி.. என பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நன்றி கூறி வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் 2015ஆம் ஆண்டு வெளியானன இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் படத்திலும் நடித்து வருகிறார்.

சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாணிக் காயிதம் திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகும். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post