ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன - - Yarl Voice ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன - - Yarl Voice

ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன -
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் பேசியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் வெளியிடும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் மலையகத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன. 

சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜீவன் தொண்டமானிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுமாறு பலர் வலியுறுத்திய நிலையில் அவர் குறித்த மக்கள் சந்திப்பில் வார்த்தை தவறு இடம்பெற்றிருந்ததாகவும் மீண்டும் அவ்வாறு வார்த்தை தவறுகள் இடம்பெறாதெனவும் கூறியிருந்தார். 

ஜீவன் தொண்டமான் பெண்களை கொச்சசைப்படுத்தியதற்காக மன்னிப்புக் கோரவில்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே நாளைய தினம் பாரிய போராட்டமொன்றை மலையக மகளிர் அமைப்புகள் முன்னெடுக்கவுள்ளன. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post