இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார் ஹரி. மனக்கசப்புகளிற்கு முடிவை காண்பதற்கான சந்தர்ப்பம் என ஆய்வாளர்கள் கருத்து - Yarl Voice இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார் ஹரி. மனக்கசப்புகளிற்கு முடிவை காண்பதற்கான சந்தர்ப்பம் என ஆய்வாளர்கள் கருத்து - Yarl Voice

இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார் ஹரி. மனக்கசப்புகளிற்கு முடிவை காண்பதற்கான சந்தர்ப்பம் என ஆய்வாளர்கள் கருத்து
இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வுகளில் ஹரி கலந்துகொள்ளவுள்ளார்.
ஹரி தனது இளவரசர் பிலி;ப்பின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வார் எனினும் கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவியை அமெரிக்காவிலேயே இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு வருட காலத்தின் பின்னர் ஹரி இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இதேவேளை இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வுகள் அரசகுடும்பத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களை ஒன்று சேர்க்கவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊடகங்கள் சமீபத்தைய பேட்டியின் பின்னர் உருவாகியுள்ள மனக்கசப்புகளிற்கு முடிவு காண்பதற்கான சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் ஹரியும் அவரது மனைவியும் ஒபராவின்பிரேயிற்கு வழங்கிய பேட்டியினால் உண்டான விரிசலிற்கு முடிவுகாண்பதற்கு ஹரியிக்கு கிடைத்துள் சந்தர்ப்பமாக இது துயரநிகழ்வு அமையும் என அரண்மணை புகைப்படப்பிடிப்பாளர் பெனி யுனெர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணத்தின் மூலம் ஏதாவது நன்மை உருவாகுமென்றால் அது அரச குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்ப்பதே என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகலதரப்பினரும் காயப்பட்டுள்ளனர், ஒருவரையொருவர் சந்திப்பதற்கு கூட அவர்கள் தயக்கமடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிஸ்டமும் மகாராணிக்கு உதவும் எண்ணமும் அவரிற்காக ஒன்றிணைந்து செயற்படும் எண்ணமும் இருந்தால் இணைவு சாத்தியமாகும் பிலிப் அதனையே விரும்பியிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்ரா பேட்டியின் போது ஹரியும்; அவரது மனைவியும் வெளியிட்ட கருத்துக்களினால் எற்பட்ட மோசமான பாதிப்புகளை சரிசெய்வதற்கு ஐக்கியத்தை காண்பிக்கவேண்டியது அவசியம் என அரண்மணை குறித்த ஆய்வாளர் ரிச்சட் பிட்பிலிம்ஸ் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post